'தன் பிழை தெரிந்தால்'' Short story Good story 🤩🤩

'தன் பிழை தெரிந்தால்'' Short story Good story 🤩🤩

 




1. தன் பிழை தெரிந்தால்


முன்னொரு காலத்தில் தஞ்சையை வளவன் என்ற அரசன் ஆண்டு வந்தான். நீதி தவறாமல் நல்லாட்சி செய்து வந்தான் அவன். அவன் ஆட்சியில் காலம் தவறாமல் மழை பெய்தது. வறட்சியோ வெள்ளமோ ஏற்படவே இல்லை. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.


பக்கத்து நாடான கரூரை அமுதன் என்ற அரசன் ஆண்டு வந்தான். சில ஆண்டுகளாக மழை பெய்யாததால் அங்கே கடுமையான வறட்சி ஏற்பட்டது. மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடினார்கள்.


அமைச்சர்களை அழைத்த அவன் "நம் நாட்டில் ஏன் மழை பெய்யவில்லை?" என்று கேட்டான். ''அரசே! நீதி தவறி நடப்பதால்தான் மழை


பொழிவது இல்லை. நம் அண்டை நாடான தஞ்சையில்வறட்சி என்பதே இல்லை. மாதம் மும்மாரி மழை பொழிகிறது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்" என்றார் அமைச்சர் ஒருவர்.


இதைக் கேட்ட அவன் "அமைச்சரே! தங்கத்தாலான ஓலைகளை எடுத்துக் கொண்டு தஞ்சைக்குச் செல்லுங்கள். அந்நாட்டு அரசரிடம் நல்லாட்சி செய்யும் வழிமுறைகளைக் கேளுங்கள். அவர் கைப்படவே இந்தத் தங்க ஓலைகளில் எழுதச் சொல்லுங்கள். அவற்றைக் கொண்டு வாருங்கள். அவரைப் போலவே நானும் நல்லாட்சி செய்ய முயற்சி செய்கிறேன்" என்றான்.


அதன்படியே அவர் தங்க ஓலைகளுடன் தஞ்சை அரண்மனை வந்தார்.


அரசனை வணங்கிய அவர் "அரசே! நான் கரூரிலிருந்து வருகிறேன். அங்கே மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடுகிறார்கள். இங்கே நல்லாட்சி நடப்பதால் மக்கள் வளமாக வாழ்கிறார்கள். நீங்கள் நல்லாட்சி செய்யும் வழிமுறைகளை இந்தப் பொன் ஓலைகளில் எழுதித் தாருங்கள். எங்கள் அரசரும் அதை அப்படியே பின்பற்றுவார். மக்களின் துன்பமும் தீரும்' என்றார்.


"நீங்கள் நினைப்பது போல நான் நல்லாட்சி செய்யவில்லை. நல்லாட்சிக்குப் புறம்பாக நானே நடந்து உள்ளேன். தைத் திருவிழாவன்று நான்கு திசைகளிலும் அம்பு எய்வது என் வழக்கம். அதே போல நான் இந்தத் திருவிழாவிலும் அம்புகளை எய்தேன். அவற்றில் ஒரு அம்பு தவளையின் மேல் பாய்ந்து அதைக் கொன்று விட்டது. ஏதும் அறியாத ஓர் உயிரை நான் கொன்று இருக்கிறேன். நான் நல்லாட்சி செய்திருந்தால் இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்து இருக்குமா?


என் நாட்டில் யாரோ ஒருவர் ஒழுக்கம் தவறாமல் உள்ளார். அதனால்தான் மக்கள் வாழ்கிறார்கள்" என்றான். வளமாக


அங்கிருந்த பலரையும் "இங்கே ஒழுக்கத்தில் சிறந்து


விளங்குபவர் யார்?” என்று விசாரித்தார் அவர். பலரும் அரசரின் தாயாரைப் பெருமையுடன் குறிப்பிட்டார்கள்.


அரசரின் தாயாரைச் சந்தித்த அவர் ''அம்மா!


எல்லோரும் உங்களை ஒழுக்கத்தில் சிறந்தவர் என்று


புகழ்கிறார்கள். நல்லாட்சி செய்யும் வழிமுறைகளை


இந்தப் பொன் ஒலைகளில் எழுதித் தாருங்கள்” என்று


கேட்டார்.


அதற்கு அவள் “எனக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் இந்நாட்டு அரசன். இளையவன் அவனுக்குத் துணையாக உள்ளான்.


ஒருமுறை அரசன் என்னிடம் விலை உயர்ந்த வைர மாலை ஒன்றைத் தந்தான். அதை யாருக்குத் தருவது என்று சிந்தித்தேன். மூத்த மருமகள் அரசியாக வளமாக இருக்கிறாள். அதனால் இளைய மருமகளுக்கே தரலாம் என்று நினைத்தான். மருகள்களுக்கு இடையேயே வேறுபாடு காணும் நான் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருக்க முடியுமா? நீங்கள் வேறு யாரையேனும் பாருங்கள்" என்றாள். அங்கே ஒழுக்கத்தில் சிறந்தவர் வேறு யார் என்று விசாரித்தார். அரசரின் தம்பி இனியனைப் பலரும் குறிப்பிட்டார்கள்.


இனியனிடம் சென்ற அவர் "உங்களை நீதிநெறி வழுவாதவர் என்று எல்லோரும் புகழ்கிறார்கள். நல்லாட்சி நடத்துவது எப்படி என்று இந்தப் பொன் ஓலைகளில் எழுதித் தாருங்கள்' என்று வேண்டினார்.


அதற்கு அவன் "நான் குதிரையில் சவுக்குடன் அமர்ந்தால் இரவு வீடு திரும்ப மாட்டேன். சவுக்கு இல்லாமல் சென்றால் இரவு வீடு திரும்பி விடுவேன். இதை வழக்கமாகக் கடைப்பிடித்து வந்தேன்.


இரவு திரும்பி விடலாம் என்ற எண்ணத்தில் சவுக்கு இல்லாமல் அரண்மனை சென்றேன். அரசர் எனக்கு வேலை வைத்ததால் அங்கேயே இரவு தங்கி விட்டேன்.


என் இலாயத்தைப் பாதுகாக்கும் வீரன் இரவு முழுவதும் எனக்காகக் காத்திருந்தான். அன்றிரவு மழை பெய்ததால் அவன் நன்றாக நனைந்து விட்டான். குளிரிலும் நடுங்கிக் கொண்டு இருந்தான். நான் பொறுப்பு இல்லாமல் நடந்ததால் அவனுக்கு இந்தத் துன்பம் நேர்ந்தது.நான் எப்படி நீதிநெறி தவறாதவனாக இருக்க முடியும்? நீங்கள் தகுதியான வேறு ஒருவரைப் பாருங்கள்" என்றான்.


அரச குருவை எல்லோரும் போற்றிப் புகழ்வதைக் கேட்டார் அவர்.


அரசகுருவிடம் சென்ற அவர் "நீதிநெறி வழுவாதவர் என்று எல்லோரும் உங்களைப் புகழ்கிறார்கள். நல்லாட்சி நடத்துவது எப்படி என்று இந்தப் பொன் ஓலைகளில் எழுதித் தாருங்கள்" என்று வேண்டினார். 'நான் நீதிநெறி தவறாதவனா? வழக்கம் போல அரசவைக்கு ஒருநாள் சென்றேன். அங்கே அரசரின் முன் பளபளக்கும் தங்க ரதம் ஒன்று இருந்தது. அதன் அழகில்


மயங்கினேன். அதை அரசரிடம் பரிசாகப் பெற


நினைத்தேன். என்னைப் பார்த்ததும் அரசர் "இந்தத் தங்க ரதம் உங்களுக்குத்தான்" என்றார்.


நான் அதன் மேல் ஆசைப்பட்டதை நினைத்து வருந்தினேன். வேண்டாம் என்று மறுத்தேன். நான் குற்றம் செய்யாதவன் அல்ல. இந்தப் பொன் ஓலைகளில் எழுதும் தகுதி எனக்கு இல்லை" என்று


மறுத்தார்.


என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தார் அந்த அமைச்சர். நாடு திரும்பிய அவர் அரசனிடம் நடந்ததை எல்லாம்


சொன்னார்.




அரசனுக்கு உண்மை புரிந்தது. ''அமைச்சரே! நம்மையே அவ்வப்பொழுது சோதனை செய்து பார்ப்பதே நற்பண்பு. அப்பொழுதுதான் ஏதேனும் தவறு செய்தாலும் திருத்திக் கொள்ள முடியும். அப்படிப்பட்டவர்கள் உள்ள நாடுதான் வளமாக இருக்கும் " என்றான் அவன்.


சொன்னது போலவே அவன் தன்னை அடிக்கடி சோதித்துப் பார்த்துக் கொண்டான். அவனைப் போலவே மக்களும் நடந்து கொண்டார்கள். அவன் நாடு வறட்சி நீங்கி வளம் பெற்றது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post