சேர்த்தி எண்கள்
இரண்டுக்கு மேற்பட்ட காரணிகளைக் கொண்ட எண்கள் சேர்த்தி எண்கள் ஆகும். ஒன்றும் முதன்மை எண்களும் தவிர்ந்த எண்கள் சேர்த்தி எண்கள் ஆகும். 4 6 8 9 10 12 14 15 16 18 20 21 22 24 25 26 27 28 30 32 33 34 35 36 38 39 40......
முதன்மை எண்கள்
ஒரு எண் 1ஆலும் அதே எண்ணாலும் மீதியில்லாமல் வகுபட்டால் அந்த எண் முதன்மை எண் அல்லது பகா எண் எனப்படுகிறது. அப்படிப்பட்ட சில முதன்மை எண்களாக 2, 3, 5, 7, 11, 13, 17 ,19 ஆகியவை உள்ளன.