60 ஆ‌ண்டுக‌ள்

60 ஆ‌ண்டுக‌ள்

அறுபது ஆண்டுகள் (ஆண்டு வட்டம் அல்லது சம்வத்சரம்) பெரும்பாலான இந்திய நாட்காட்டிகளில் காலக்கணிப்பில் பயன்படும் ஒரு சுற்றுவட்டம் ஆகும். இவை அறுபதுக்கும் பஞ்சாங்கங்களில் தனித்தனிப் பெயர்கள் குறிப்பிடப்படுவதுடன், அறுபதாண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டியல் மீள்வதாகச் சொல்லப்படுகின்றது. சமகாலத்தில் தமிழ் நாட்காட்டியிலும் கன்னடர் - தெலுங்கர் பயன்படுத்தும் உகாதி நாட்காட்டியிலும் இது பரவலாகப் பயன்படுகின்றது.

இந்துக் காலக் கணிப்பு முறையில், இரவு-பகல், வாரநாட்கள், மாதங்கள் போல ஆண்டுகளும் சுழற்சி முறையில் அமைந்துள்ளன. இந்த ஆண்டு வட்டம் ஒவ்வொன்றும் 60 ஆண்டுகளைக் கொண்டது. இதிலுள்ள ஒவ்வோர் ஆண்டுக்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு. பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் ஒரு சுற்று நிறைவடைந்ததும் மீண்டும் இன்னொரு பிரபவ ஆண்டில் அடுத்த வட்டம் ஆரம்பமாகும்.

எண்.பெயர்பெயர் (தமிழில்)பெயர் (ஆங்கிலத்தில்)கிரகோரி ஆண்டுஎண்.பெயர்பெயர் (தமிழில்)பெயர் (ஆங்கிலத்தில்)கிரகோரி ஆண்டு
01.பிரபவநற்றோன்றல்Prabhava1987–198831.ஹேவிளம்பிபொற்றடைHevilambi2017–2018
02.விபவஉயர்தோன்றல்Vibhava1988–198932.விளம்பிஅட்டிVilambi2018–2019
03.சுக்லவெள்ளொளிSukla1989–199033.விகாரிஎழில்மாறல்Vikari2019–2020
04.பிரமோதூதபேருவகைPramodoota1990–199134.சார்வரிவீறியெழல்Sarvari2020–2021
05.பிரசோற்பத்திமக்கட்செல்வம்Prachorpaththi1991–199235.பிலவகீழறைPlava2021–2022
06.ஆங்கீரசஅயல்முனிAangirasa1992–199336.சுபகிருதுநற்செய்கைSubakrith2022–2023
07.ஸ்ரீமுகதிருமுகம்Srimukha1993–199437.சோபகிருதுமங்கலம்Sobakrith2023–2024
08.பவதோற்றம்Bhava1994–199538.குரோதிபகைக்கேடுKrodhi2024–2025
09.யுவஇளமைYuva1995–199639.விசுவாசுவஉலகநிறைவுVisuvaasuva2025–2026
10.தாதுமாழைDhaatu1996–199740.பரபாவஅருட்டோற்றம்Parabhaava2026–2027
11.ஈஸ்வரஈச்சுரம்Eesvara1997–199841.பிலவங்கநச்சுப்புழைPlavanga2027–2028
12.வெகுதானியகூலவளம்Bahudhanya1998–199942.கீலகபிணைவிரகுKeelaka2028–2029
13.பிரமாதிமுன்மைPramathi1999–200043.சௌமியஅழகுSaumya2029–2030
14.விக்கிரமநேர்நிரல்Vikrama2000–200144.சாதாரணபொதுநிலைSadharana2030–2031
15.விஷுவிளைபயன்Vishu2001–200245.விரோதகிருதுஇகல்வீறுVirodhikrithu2031–2032
16.சித்திரபானுஓவியக்கதிர்Chitrabaanu2002–200346.பரிதாபிகழிவிரக்கம்Paridhaabi2032–2033
17.சுபானுநற்கதிர்Subhaanu2003–200447.பிரமாதீசநற்றலைமைPramaadhisa2033–2034
18.தாரணதாங்கெழில்Dhaarana2004–200548.ஆனந்தபெருமகிழ்ச்சிAanandha2034–2035
19.பார்த்திபநிலவரையன்Paarthiba2005–200649.ராட்சசபெருமறம்Rakshasa2035–2036
20.வியவிரிமாண்புViya2006–200750.நளதாமரைNala2036–2037
21.சர்வசித்துமுற்றறிவு யாவுந்திறல் [13]Sarvajith2007–200851.பிங்களபொன்மைPingala2037–2038
22.சர்வதாரிமுழுநிறைவுSarvadhari2008–200952.காளயுக்திகருமைவீச்சுKalayukthi2038–2039
23.விரோதிதீர்பகைVirodhi2009–201053.சித்தார்த்திமுன்னியமுடிதல்Siddharthi2039–2040
24.விக்ருதிவளமாற்றம்Vikruthi2010–201154.ரௌத்திரிஅழலிRaudhri2040–2041
25.கரசெய்நேர்த்திKara2011–201255.துன்மதிகொடுமதிDunmathi2041–2042
26.நந்தனநற்குழவிNandhana2012–201356.துந்துபிபேரிகைDhundubhi2042–2043
27.விஜயஉயர்வாகைVijaya2013–201457.ருத்ரோத்காரிஒடுங்கிRudhrodhgaari2043–2044
28.ஜயவாகைJaya2014–201558.ரக்தாட்சிசெம்மைRaktakshi2044–2045
29.மன்மதகாதன்மைManmatha2015–201659.குரோதனஎதிரேற்றம்Krodhana2045–2046
30.துன்முகிவெம்முகம்Dhunmuki2016–201760.அட்சயவளங்கலன்Akshaya2046–2047

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post