ஒத்த கருத்துச் சொற்கள்{01}

ஒத்த கருத்துச் சொற்கள்{01}

 


                           ஒத்த கருத்துச் சொற்கள்




ஒரு பொருள் தரும் பல சொற்கள்


பொருள்சொற்கள்
அன்புபாசம், நேசம், கருணை, காதல், இரக்கம், ஈரம், பற்று, பரிவு
அழகுவடிவு, எழில், சுந்தரம், கவின், அணி, வனப்பு
ஆசைஆவல், விருப்பம், அவா
சினம்கோபம், சீற்றம், ஆத்திரம், முனிதல், காய்தல்
சிரிப்புபுன்னகை, நகைப்பு, முறுவல்
கண்விழி, நேத்திரம், நயனம்
குளம்பொய்கை, வாவி, தடாகம்
பறவைபட்சி, புள்
பாட்டுகவி, கவிதை, செய்யுள்,பா, பாடல், கீதம்
புத்தகம்ஏடு, நூல், இழை, பனுவல்
இரத்தம்குருதி, உதிரம், சோரி, கறை
பகைவன்எதிரி, விரோதி
பூமிஉலகம், புவி, பார், வையகம், அகிலம், தரணி, குவலயம்
சந்தோசம்உவகை, களிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம், இன்பம், குதூகலம்
உடல்உடம்பு, மேனி, மெய், சரீரம், தேகம், காயம், யாக்கை
துன்பம்இன்னல், அல்லல், இடர், வேதனை, கவலை, துயரம்
உலகம்பார், வையகம், தரணி, பூமி, ஞாலம், புவனம்
சூரியன்ஞாயிறு, பகலவன், பரிதி, கதிரவன், ஆதவன்
சந்திரன்திங்கள், நிலா, மதி, அம்புலி, பிறை, வான்மதி
சண்டைசமர், அமர், போர், யுத்தம்
நட்சத்திரம்விண்மீன், உடு, தாரகை
வானம்ஆகாயம், விசும்பு, விண், அண்டம், விண்ணகம், அந்தரம், உம்பர், சேண்
மன்னன்அரசன், கோ, வேந்தன், கோன், இராசன்
ஆசிரியர்குரு, ஆசான், உபாத்தியாயர், குரவன், தேசிகன்
காடுகானகம், அடவி, வனம், அரணி, ஆரணியம்
மலர்பூ, புஷ்பம்
மனைவிமனையாள், இல்லாள், தலைவி, கிழத்தி
தலைசிரசு, உச்சி
நித்திரைதுயில், உறக்கம், சயனம், தூக்கம், துஞ்சல்
சோறுஅன்னம், அமுது, அடிசில், சாதம்
வீடுமனை, இல்லம், உறையுள், அகம்
குழந்தைசிசு, குழவி, சேய், மழலை
விருப்பம்ஆசை, அவா, வேட்கை, பற்று
உணவுஊண், உண்டி, சாப்பாடு, ஆகாரம்
பெண்மங்கை, யுவதி, காரிகை, மாது, பாவை, நங்கை
நெருப்புதீ, அக்கினி, அழல், தழல், அனல், கனல்
உண்மைமெய், சத்தியம், வாய்மை
குதிரைமா, புரவி, அசுவம், பரி, துரகம்
குழந்தைமகவு, சேய், பிள்ளை, குழவி, சிசு, மழலை
வண்டுஅளி, மதுகரம், சுரும்பு
ஊழியம்தொண்டு, பணி, சேவை, வேலை
நீர்தண்ணீர், அப்பு, புனல், சலம், தீர்த்தம்
ஒலிஓசை, சத்தம், அரவம், இரைச்சல், தொனி, ஆரவாரம்
ஒளிவெளிச்சம், சுடர், தீபம், சோதி, கதிர், பிரகாசம்
அடிகழல், கால், தாள், பதம், பாதம்
இனம்கிளை, சுற்றம், பரிசனம், உறவு, ஒக்கல்
சோலைஉபவனம், கா, தண்டலை, நந்தவனம், பூங்கா, பொழில்
தோழன்நண்பன், சிநேகிதன், பாங்கன், துணைவன்
நீதிதருமன், நீதம், நடு, நியாயம், நெறி
வயல்களனி, செறு, செய், பண்ணை, பழனம்
வாசனைகந்தம், கடி, நாற்றம், விரை, மணம்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post