1. “காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும் சங்கு அது என்ன? சேவல்”
2. அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன? காற்று
3. குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்? கத்தரிக்காய்
4. அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும் – அது என்ன? இளநீர்
5. எட்டாத ராணியாம் இரவில் வருவாள், பகலில் மறைவாள். அது யார்? நிலா
6. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன ? மத்து
7. கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்? புகை
8. அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். அது என்ன? சாம்பிராணி
9. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார் ? தலையணை
10. “நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத தண்ணீர் இல்லை அது என்ன? அச்சு வெல்லம்”
விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 21
1. வாலால் நீர் குடிக்கும்,வயால் பூச்சொரியும் அது என்ன? விளக்கு
2. அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன? மிருதங்கம்
3. கை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண், கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்? காலிங்பெல்
4. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு. அது என்ன? வானம்
5. ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும். அது என்ன? ரத்தம்
6. கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிற்குது. அது என்ன? உளுந்து
7. மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன? தீபம்
8. “காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம் அது என்ன? வானம்”
9. உரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும் அது என்ன? தீக்குச்சி
10. ஆறு எழுத்துள்ள ஓர் உலோகப் பெயர். அதன் கடை மூன்று எழுத்துகள் சேர்ந்தால் ஒரு கொடிய பிராணி. அது என்ன? துத்தநாகம்
விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 22
1. வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன? மழை
2. மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன? மஞ்சள்
3. “காளைக்குக் கழுத்து மட்டும் தண்ணீர் அது என்ன? தவளை”
4. ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன? கண்ணீர்
5. “நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்? வெங்காயம்”
6. தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்? உப்பு
7. சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான் – அது என்ன? தீக்குச்சி
8. “நடலாம், பிடுங்க முடியாது அது என்ன? பச்சை குத்துதல்”
9. ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவை யாவை? எறும்புகள்
10. “ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன? ஊதுபத்தி”
விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 23
1. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ளநீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன? நெருப்பு
2. தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன? கண் இமை
3. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார் ? மெட்டி
4. வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும். அது என்ன? வாழை
5. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை – அது என்ன ? தலை வகிடு
6. “வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி அது என்ன? மயில்”
7. அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன? மதி
8. வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன? உப்பு
9. “வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்? கத்தரிக்கோல்”
10. தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார்? இளநீர்