QUIZ TIME

No title

 

பூமியின் உட்புறத்திலுள்ள மிகவும் வெப்பமான கற்குழம்பு வெடித்து வெளியேறும் பகுதியை எரிமலை என்கிறோம். வெப்பமான பாறைகள் மேல்நோக்கி வருவதாலும் எரிமலைகள் உண்டாகின்றன. உமிழப்படும் எரிமலைக் குழம்பு "மாக்மா' எனப்படும். எரிமலையை ஆங்கிலத்தில் "வால்கனோ' என்று அழைப்பர். இந்த சொல் இத்தாலிய மொழியிலிருந்து வந்தது. ரோமானிய அக்னி கடவுளுக்கு "வால்கன்' என்று பெயர். இதிலிருந்துதான் "வால்கனோ' என்ற சொல் வந்தது. எரிமலைகள் குறித்து ஆய்வு செய்யும் படிப்புக்கு "வால்கனோலஜி' என்று பெயர்.

வடிவம்


பொதுவாக எரிமலைகள் கூம்பு வடிவம் கொண்டதாக இருக்கும். அதன் உச்சி, எரிமலைக்குழம்பை உமிழும் தன்மை பெற்றிருக்கும். இதிலிருந்து சாம்பல் மற்றும் வெப்பக்கற்கள் வெளிவரும். எரிமலைகள் அதன் தன்மை, வடிவத்துக்கேற்ப பிரிக்கப்படுகிறது. அவை* கவச எரிமலைகள்* சுழல் வடிவ எரிமலைகள் (கலப்பு எரிமலைகள்)* ராட்சத எரிமலைகள்* ஆழ்கடல் எரிமலைகள்* உறைபனியின் கீழுள்ள எரிமலைகள்* புதைசேற்று எரிமலைகள்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post