விடுகதைகள் – Vidukathai in Tamil (07)

விடுகதைகள் – Vidukathai in Tamil (07)

                             



விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 28

 1. அண்டமென்ற பெயரும் உண்டு, அடைகாத்தால் குஞ்சுமுண்டு. அது என்ன? முட்டை 

2. ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்? பம்பரம் 

3. “காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல அது என்ன? முள்” 

4.ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன? மரம்  

5. பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது. அது என்ன? பாம்பு 

6. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல. அது என்ன? சூரியன் 

7. பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன? முருங்கைமரம் 

8. என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார் ? துவாரம் 

9. “தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன? தொட்டா சுருங்கிச் செடி” 

10. ஆகாயத்தில் பறக்கும். அக்கம் பக்கம் போகாது. அது என்ன? கொடி


 விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 29 

1. அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன? நிலா 

2. பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன? பெட்ரோல் 

3. இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன? இதயம்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post